தனது குணங்களை மாற்றிக் கொள்வதால் தெய்வமாக மாற முடியும்...!!

தனது குணங்களை மாற்றிக் கொள்வதால் தெய்வமாக மாற முடியும்...!!

விருப்பு வெறுப்புகள் மனிதனின் இயல்பான குணம் என்றாலும் அதை ஒரு அளவில் வைத்து மக்கள் வாழ வேண்டும் என நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி‌. நகரில் உள்ள செட்டிநாட்டு வித்யாஸ்ரம் பள்ளியில் வானவில் பண்பாட்டு‌ மையம் சார்பில், சரஸ்வதி சம்மான் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, எழுத்தாளர் சிவசங்கரிக்கு விருது வழங்கினார். எழுத்தாளர் சிவசங்கரியை வாழ்த்தி மேடையில் பேசும்போது "விருப்பு வெறுப்புகள் மனிதனின் இயல்பான குணம் என்றாலும் அதை ஒரு அளவில் வைத்து மக்கள் வாழ வேண்டும்" என நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், மனிதன் தன் முயற்சியாலும் தனது குணங்களை மாற்றிக் கொள்வதாலும் தெய்வமாக மாற முடியும் என்றும் அதற்கு ராமாயணம் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com