நாதக அனுமதி இல்லாமல் பிரச்சாரம் இபிஎஸ் தலைமையில் ஒரு தேர்தலில் கூட வெற்றி இல்லை - பிரத்யேக பேட்டியில் அமைச்சர்

நாதக அனுமதி இல்லாமல் பிரச்சாரம் இபிஎஸ் தலைமையில் ஒரு தேர்தலில் கூட வெற்றி இல்லை - பிரத்யேக பேட்டியில் அமைச்சர்

ஒற்றைத் தலைமை என சொல்லப்படுகிற எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இதுவரை எந்த தேர்தலில் அதிமுக வென்று இருக்கிறது....?நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில் அனுமதியே பெறாமல் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர் நிச்சயமாக அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மாலை முரசு தொலைக்காட்சிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பிரத்யேக பேட்டியில்....

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது அமைச்சர்கள் எதிர்க்கட்சியை சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில வீரப்பன் சத்திரம் பகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயிரத்தி இருத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்

அப்போது மாலைமுரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர்...

பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கைச்சின்னத்துக்கு வாக்களிக்க தயாராகி வருகின்றனர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்தார் மேலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் அனைத்துமே முற்றிலும் ஆன பொய் என்றும் மற்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெறும்போது இதே போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதை தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை ஒப்புக் கொள்வாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது எந்த இடத்தில் மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com