"10 ஆண்டுகளில் யானைகளை பார்க்க முடியாது"  உயர்நீதிமன்றம் வேதனை!

"10 ஆண்டுகளில் யானைகளை பார்க்க முடியாது"  உயர்நீதிமன்றம் வேதனை!

யானைகளை பாதுகாக்க தீவிரம் காட்டாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் யானைகளை பார்க்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது

வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது சமீபத்தில் மின்வேலியில் சிக்கி நான்கு யானைகள் மரணமடைந்த விவகாரத்தை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், யானைகளை பாதுகாக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் யானைகளை பார்க்க முடியாது என்றும் வேதனை தெரிவித்தனர்.

மின்வேலி அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என  நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்வதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com