"காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையும்" அமைச்சர் கே.என். நேரு!

"காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையும்" அமைச்சர் கே.என். நேரு!

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவடைந்து விடும் என அமைச்சா் கேஎன் நேரு தொிவித்துள்ளாா்.

தஞ்சாவூரில் சீர்மிகு திட்டத்தின் கீழ் 140 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 14 கட்டுமானங்களைத் திறந்து வைப்பதற்காகத்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 27ஆம் தேதி வருகிறார். இதையொட்டி, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கம், ஆம்னி பேருந்து நிலையத்தை பார்வையிட்டுள்ளார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு.

அப்பொழுது இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் 90 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. சீர்மிகு திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையம், மாநாட்டு அரங்கம் உள்பட ரூபாய் 140 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 14 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். வல்லம் குவாரி சாலைக்கு தமிழ்ச் சாலை என பெயர் சூட்டவுள்ளார். சில இடங்களில் சட்டரீதியான பிரச்சனைகள் வந்துவிட்டதால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அவற்றையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

மேலும், கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
இதையும் படிக்க || மணிப்பூா் விவகாரம்: வேகமாகப் பரவும் வதந்திகள்... அதிகாரிகள் எச்சரிக்கை!

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com