18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...சென்னை வானிலை மையம் தகவல்!

18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை மையம் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக,  திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி ஆகிய 18 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்த வரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com