தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இன்றிலிருந்து 4 ஆம் தேதி வரையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்  இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசையின் காற்று வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றிலிருந்து 4 ஆம் தேதி வரையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல, 5 ஆம் தேதியில் இருந்து 8 ஆம் தேதி வரையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரம் வரையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com