17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற தேரோட்டத் திருவிழா

கோயிலை சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற தேரோட்டத் திருவிழா

தேவகோட்டை சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் ஆனி தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 1998-ல் தேரோட்டத்தின் போது இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் நின்றபோனது. பின்னர் 2016 ல் புதிய தேர் செய்யப்பட்டும் தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் கோயிலில் ஆனி திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.17 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெறுவதால் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வடம் பிடித்து தேரை இழுக்க முடிவு செய்தனர்.. 600 பேருக்கு மட்டும் தேரை வடம் பிடித்து இழுக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் . 11 மாவட்டங்களில் இருந்து வந்த 3000 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விழாவில் கூட்டுறவு .துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com