ஒரே டிக்கெட்டில் 3 வகை பயணம் : மார்ச்சில் தொடக்கம்

சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணம் செய்யும் திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது.
ஒரே டிக்கெட்டில் 3 வகை பயணம் : மார்ச்சில் தொடக்கம்

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டத்திற்கான செயலியை உருவாக்க Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கி உள்ளது. அதன்படி முதற்கட்டமாக, இந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com