நீட் தேர்வு விலக்கு: இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர்

நீட் தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக இன்று மாலை ஆளுநர் என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ளார்.
நீட் தேர்வு விலக்கு: இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர்

நீட் தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக இன்று மாலை ஆளுநர் என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ளார்.

நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் சட்ட மசோதா நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறவேண்டியுள்ளது. அதேநேரம் நீட் சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் ஒப்புதல் கிடைக்காத நிலை இருந்து வருகின்றது.  

இதையடுத்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி ஆளுநரை இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் சந்திக்கிறார். இந்த சந்திப்பிற்கு பின் நீட் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com