நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளம்- விபத்துகள் தொடர்கதையாகி வருவதால் பொதுமக்கள் அச்சம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையம் எதிரே நெடுஞ்சாலையில்  உள்ள  ஆபத்தான பள்ளத்தால் வாகன விபத்துகள் தொடர்ந்து வருகிறது.

வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக  மற்றும்  பேருந்து நிலையத்திற்கு எதிரே  சென்னை பெங்களூரூ நெடுஞ்சாலை மற்றும் சோளிங்கர் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இந்த இரு சாலைகள்  சந்திக்கும் இடம் பல மாதங்களாக குண்டு குழியுமாக காணப்படுகின்றது. இவ்வழியாக செல்லும் ஏராளமான பஸ், லாரி என கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தட்டு தடுமாறி அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேளையில் இப்பகுதி போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. மேலும் இந்த சாலை சந்திப்பில் செல்லும் இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று  வேகமாக வந்து மோதிக் கொள்வதால்  விபத்துக்களும் உயிரிழப்புகளும்  நடப்பது தொடர்கதையாகி வருகிறது..எனவே  மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பள்ளத்தை உடனடியாக  சீரமைக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com