ரூ.2,000 நோட்டுகளுக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து காங்கிரஸார் நூதன ஆர்ப்பாட்டம்...!

ரூ.2,000 நோட்டுகளுக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து காங்கிரஸார் நூதன ஆர்ப்பாட்டம்...!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் பாடை கட்டியும், ஒப்பாரி வைத்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

நாடு முழுவதும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, 2000 ரூபாய் நோட்டு கட்டுகளுக்கு பாடை கட்டியும், மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com