திருப்பூரில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததால் உணவருந்திய பொது மக்கள் அதிர்ச்சி

சாம்பாரில் கரப்பான் பூச்சி; உணவருந்தியவர்கள் அதிர்ச்சி
திருப்பூரில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததால் உணவருந்திய பொது மக்கள் அதிர்ச்சி

திருப்பூரில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததால் உணவருந்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பிரபல சைவ உணவகமான அன்னபூர்ணா உணவகத்தில் திருப்பூரை சேர்ந்த எல் ஐ.சி குழுவினர் 20 ககும்.மேற்பட்டோர் உணவருந்த சென்றனர். அப்போது ஒரு பெண்மணிக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து ஊழியர்களிடம் புகார் தெரிவிக்க அவர்கள் முறையான பதில் அளிக்கததால் ,ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாம்பாரில் விழுந்த கரப்பான் பூச்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com