நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை....!!!

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை....!!!

நேற்று பெய்த கன மழையில் 15000 வாழை மரம் 3 கோடி மதிப்பு சூரை காற்றால் சேதம் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக் கடவு தாலுக்கா பகுதிகளில் தானிய வகைகள் தென்னை வாழை உள்ளிட்டவை விவசாயம் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள பெட்டையாண்டிபுரம் சாந்தலிங்கம் என்பவரின் தனியார் தோட்டத்தில் 2000 வாழை மரங்கள் கனமழையால் சேதம், பாலக்காட்டு கணவாய் உள்ளதால் இப்பகுதிகளில் வருடத்தில் இருமழை பொழியும், விவசாயிகள் விவசாயம் செய்ய தோட்டத்து பத்திரம் வீடு பத்திரங்களை வங்கிகளில் அடமானம் வைத்து சொட்டுநீர் பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். 

கல்குவாரிகள் அதிகம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையும் உள்ளது.  நேற்று திடீர் சூரை காற்றுடன் கனமழையால் கிணத்துகடவு சுற்றுவட்டார விவசாய நிலங்களில் இருந்த 15000 வாழைமரம் சுமார் ரூ 3 கோடி மதிப்பு கன மழையால் சேதம் அடைந்தது. 

தற்போது சட்டமன்ற கூட்டதொடர் நடைபெற்று வருவதால் தமிழக முதலமைச்சர் விவசாயிகள் நலன் கருதி பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com