“கோவையின் மீது அக்கறை கொண்டு.....” அமைச்சர் செந்தில் பாலாஜி!!

“கோவையின் மீது அக்கறை கொண்டு.....” அமைச்சர் செந்தில் பாலாஜி!!

கோவையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

கோவையில் கெம்பட்டி காலனி உள்ளிட்ட 100 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.  அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  கோவை தெற்கில் 13 இடங்களில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.  மேலும், 100 வார்டுகளிலும் மொத்தம் 193 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், கோவையில் மெட்ரோ ரயில்  குறித்த கேள்விக்கு, அதன் திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்று பதிலளித்தார். 

மேலும் கோவையில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படும் வகையில் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கோவையின் மீது அக்கறை கொண்டு முதலமைச்சர் திட்டங்களை வழங்கி வருவதாகவும், சென்ற ஆட்சியின்போது போடப்பட்ட சாலைகள்தான் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com