குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா தொடக்கம்...

கொடைக்கான‌ல் அருகேயுள்ள குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா தொடக்கம்...

திண்டுக்க‌ல் | கொடைக்கான‌ல் அருகே சுமார் 15 கிமீ தொலைவில் பூம்பாறை கிராம‌ம் அமைந்துள்ள‌து. இங்கு 3000 ஆண்டுக‌ள் ப‌ழ‌மையான ‌அருள்மிகு குழந்தைவேல‌ப்ப‌ர் திருக்கோவில் அமைந்துள்ள‌து.

வ‌ருட‌ வ‌ருட‌ம் தை மாத‌த்தை ஓட்டி கொடியேற்ற‌துட‌ன் திருவிழா ந‌டைபெரும். இந்நிலையில் இந்த வருடம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முருக‌னுக்கு ப‌ல்வேறு சிற‌ப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து.

வெகு விமர்சையாக  கொடியேற்ற‌மான‌து த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ இசை க‌ருவிக‌ளை இசைத்தும் கொடி ஏற்ற‌ப்ப‌ட்ட‌து. கொடியேற்ற விழாவில் ஆயிரக்கணக்கான ம‌க்க‌ள் மற்றும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் க‌ல‌ந்து கொண்ட‌னர்.

இத‌னை தொட‌ர்ந்து வ‌ரும் பிப்ரவரி 15 ஆம் தேதி தேர் திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com