ஆவடியில் அதிக ஊக்கமருந்து எடுத்துக் கொண்ட உடற்பயிற்சியாளர் மரணம்...!!

ஆவடியில் அதிக ஊக்கமருந்து எடுத்துக் கொண்ட உடற்பயிற்சியாளர் மரணம்...!!

ஆவடி அருகே நெமிலிச்சேரியில் உடற்பயிற்சி ஆசிரியர் ரத்த வாந்தி எடுத்து உயிர் இழந்துள்ளார்.  அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிர் இழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன் இவரது மகன் சபரி முத்து என்கின்ற ஆகாஷ்.  அவரது வயது 25.  நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றி வந்தார்.  25 வயதான ஆகாஷ் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.  இதனால் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றிப் பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.  பின்னர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு கிட்னியும் செயல் இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து  தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த  சபரி முத்து சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார்.  26 ஆம் தேதி நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற சபரி முத்து கடுமையாக உடற்பயிற்சி செய்ததுடன் கட்டுடல் கொண்டு வர சீராய்டு ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் இரண்டு கிட்னியும் செயல் இழந்து சபரி முத்து உயிர் இழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com