பேருந்து கவிழ்ந்து விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

அரியலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பேருந்து கவிழ்ந்து விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

அரியலூர் | விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் தேவி தம்பதியினரின் மகள் திருமணம் அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு வரதராஜனின் உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தில் செந்துறையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

திருமணம் முடிந்தவுடன் மீண்டும் கார்குடல் கிராமத்தை நோக்கி தேவனூர் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது தேவனூர் வளைவில் திரும்பும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய தனியார் பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com