வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பவனி வந்த முருகன்...

வேம்பன்பட்டி கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பவனி வந்த முருகன்...

புதுக்கோட்டை | கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டி கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

கந்தர்வகோட்டை சிவன் கோயிலிலிருந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐம்பொன்னாலான சுவாமி சிலையை வைத்து ஏராளமான பக்தர்கள் புடை சூழ ஆட்டம் பாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலமானது அக்கச்சிபட்டி மட்டாங்கால் சிவந்தான்பட்டி புதுப்பட்டி வழியாக வேம்பன்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றது. சுவாமி ஊர்வலம் சென்ற கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் விடிய விடிய நின்று சுவாமி தரிசனம் மேற்கொண்டதால் அப்பகுதிகளில் விழா கோலம் பூண்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com