வீட்டுக்குள் புகுந்து திருடிய மர்ம கும்பல் ;குற்றவாளிகளை தேடி வரும் போலீசார்...

வீட்டுக்குள் புகுந்து திருடிய மர்ம கும்பல் ;குற்றவாளிகளை தேடி வரும் போலீசார்...

ஆவடி அருகே திருநின்றவூரில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டுக்குள் புகுந்து 8 கைபேசிகள் இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வீட்டுக்குள் புகுந்து திருடிய மர்ம கும்பல் :

ஆவடி அருகே திருநின்றவூர் நாச்சியார்சத்திரம் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி 2015 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கீதா. இதற்கிடையில் கடந்த ஆண்டு சிவசங்கரன் காலமானதையடுத்து அவரது ஓராண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட இருந்தது. இந்த நிகழ்வுக்கு அவரது உறவினர்கள் சனிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டு கதவு திறந்து கிடந்த நிலையில் மர்மநபர்கள் உள்ளே புகுந்து உறவினர்கள் வைத்திருந்த 8 கைபேசிகள்,வீட்டு முன்பு நிறுத்தி இருந்த ஒரு இருசக்கர வாகனம், மூன்று இரு சக்கர வாகனத்தின் சாவிகள்,ஹெல்மெட்டுகள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து கீதா திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.காவல் ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைப்பேசிகள் மற்றும் இரு சக்கர வாகனத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.நள்ளிரவு நேரங்களில் திருநின்றவூர் காவல் துறையினர் ரோந்து பணியை தொடர்ந்து மேற்கொள்ளாததால் இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்கள் இந்த பகுதியில் நடந்து வருவதாக எஸ்.ஐ மதன் தெரிவித்தார்.மேலும் குடியிருப்பு பகுதி அருகாமையில் ரயில்வே தண்டவாளம் இருப்பதால் அந்த  வழியாக வரும் மர்ம நபர்கள் தான் கைவரிசை காட்டுவதாக கூறும் அவர்,சில இளைஞர்கள் தமது பகுதியில் சுற்றி வருவதாகவும் சிசிடிவி கேமராவே இல்லை என குற்றம்சாட்டினார். இது போன்ற திருட்டு சம்பவம் நடைபெறாமல் இருக்க உடனடியாக காவல்துறையின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com