குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்....சரிசெய்யப்படுமா?!!!

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்....சரிசெய்யப்படுமா?!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாய் உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி செல்கிறது. 

குளித்தலை அடுத்த கீழவதியம் பகுதி காவிரி ஆற்றில் இருந்து ராட்சத  குழாய்கள் மூலம் திருச்சி மாவட்டம், மருங்காபுரி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மணப்பாறை அடுத்த கல்பாளையத்தான்பட்டியில்  காவிரி குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் தேங்கி நிற்கிறது. 

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, பழுதடைந்த காவிரி குடிநீர் குழாயை  சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com