”தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும்” - ஜெயக்குமார்!

”தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும்” - ஜெயக்குமார்!

தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் நெருங்கும் போது அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் சேரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சிலம்பு செல்வர் மா பொ சிவஞானத்தின் 118 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள மா.பொ.சி.யின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவ படத்திற்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மா.பொ.சி. இல்லை என்றால், ஆந்திராவின் தலைநகராக சென்னை இருந்திருக்கும் என்று கூறினார்.

இதையும் படிக்க : மகளிருக்கு ரூ.1,000 ரூபாய் வழங்கும் திட்டம்...முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை! 

தொடர்ந்து பேசிய அவர், மக்களின் வரிப்பணத்தை எடுத்து அனுபவித்தவர்கள் யாராக இருந்தாலும், தண்ணீர் குடித்தாக வேண்டும் என்றவர், தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் நெருங்கும் போது அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் சேரும் என்று கூறினார். மேலும், சமூக நீதி குறித்து பேச தி.மு.க.வுக்கு அருகதை இல்லை என்றும் சாடினார். 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com