தமிழகம் மதுவால் சீரழிந்து போனதற்கு தி.மு.க அரசு தான் காரணம்- ஹெச்.ராஜா

தமிழகம் மதுவால் சீரழிந்து போனதற்கு தி.மு.க அரசு தான் காரணம்- ஹெச்.ராஜா
Published on
Updated on
1 min read

சென்னை நுங்கம் பாக்கத்திலுள்ள 4ஃப்ரேம்ஸ் திரையரங்கில் மாவீரன் பிள்ளை என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. 

இத்திரைப்படத்தை பார்க்க ஹெச்.ராஜா இந்து மக்கள் முன்னனியைச் சேர்ந்த ராம ரவிக்குமார். நடிகர் ராதாரவி ஆகியோர் படத்தை பார்த்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தனர் .

 பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா இவ்வாறு பேசினார்

 1987ல் இருந்து தமிழகம் மதுவிலக்கு மாநிலமாக இருந்தது.எப்போது கருணாநிதி ஆட்சிக்கு வந்தாரோ அப்போது  தான் இந்த மதுவால் தமிழகம் சீரழியும் நிலை உருவானது என்று தெரிவித்தார் . சுதந்திரம் பெறுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு 1947 க்கு பிறகும் மதுவிலக்கு மாநிலமாக தான் இருந்தது. 

 கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் டாஸ்மார்க் கட்டாயமாக கொண்டு வரப்பட்டது என்றும் குடிப்பதால் மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப் படுவதாகவும் இந்த மதுவால் தமிழகம் சீரழிவதற்கு காரணம் தி.மு‌.க அரசு தான் என்ற காட்டமான விமர்சனத்தையும் வைத்தார். பெண்கள் வீட்டிலிருக்கிற அனைவரும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்களிடமும் கேட்டுக்கொண்டார். 

 பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி விதவைகள் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறார்கள் என்று சமீபத்தில் கூறினார் அதற்கு காரணமே இந்த மதுவால் ஒவ்வொரு குடும்பமும் தன்னிலையிலிருந்து சீரழிந்து போவது தான் காரணமென்று தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com