திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைப்பு...!

புயல் எதிரொலியாக சேலத்தில் நடைபெற இருந்த திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞர் அணி மாநாடு சேலத்தில், வரும் 17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும், நிவாரணம் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதால், 17 ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக இளைஞர் அணி மாநாடு, வரும் 24 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com