குடிக்க வைத்ததும் குடி கெடுத்ததும் தான் திராவிட மாடல் - எச். ராஜா

குடிக்க வைத்ததும் குடி கெடுத்ததும் தான் திராவிட மாடல்  - எச். ராஜா

இந்து மக்கள் கட்சி தலைவர்கள் அர்ஜுன் சம்பத் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் பொன்னியின் செல்வன் பகுதி 2 திரைப்படத்தை பார்த்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.


இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி :-

பொன்னின் செல்வன் இரண்டு பாகங்களும்  கல்கியின் நாவலை வைத்து இயக்கி உள்ளார் 
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களின் நோக்கமும் வெற்றி அடைய வேண்டும் என்பது தான் பொன்னியின் செல்வனின் இரு பாகங்களின் கதை சோழனின் வரலாறு பற்றி மீண்டும் பொதுமக்களுக்கு தெரிவிப்பது தான்இந்த திரைப்படம் முழுவதும் சோழனின் வீரம் பற்றி பறை சாற்றி இருக்கிறது. சேர,சோழர்களின் சண்டை காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளது. சோழர்கள் பெருமாள்,சிவன் பக்தி உடையவர்கள்.சோழர்களின் அந்த கால ஆட்சி போர்கால ஆட்சியாக இருந்தது.

இந்திய ஒருமை பாட்டிற்கு எதிராக செயல் படுகிறது திமுக ஆட்சி

சோழர்கள் காலத்தில் 30, 000 கோவில்களுக்கும் மேல் கட்டிஉள்ளனர் அந்த காலத்தில் பணக்கார ஆட்சியாக திகழ்ந்தது சோழர்களின் ஆட்சி தான்.கேரளா ஸ்ட்ரோரி என்ற திரைப்படம் இந்து முஸ்லீம் பற்றி எடுத்துள்ளனர்.கேரளா ஸ்ட்ரோரி திரைப்படத்தில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் கேட்கலாம்.  திரைப்படம் வெளிவராவதற்கு முன்பே இந்த திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று பேசுவது தவறு கேரளா ஸ்ட்ரோரி திரைப் படத்திற்கு  திரைப்படத்தை வெளியிடலாம் என்று அரசு சான்றிதழ் வழங்கி உள்ளது. பிறகு ஏன் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்பதை எதிர்க்க வேண்டும். திரைப்படம் முதலில் வெளிவர வேண்டும் பிறகு ஏதேனும் தவறு இருந்தால் அப்போது கேட்கலாம்.இந்திய ஒருமை பாட்டிற்கு எதிராக செயல் படுகிறது திமுக ஆட்சி.திமுக ஆட்சி முன்னரே காலாவதி ஆகிவிட்டது, அது உண்மை தான்தமிழகத்தில் தேசிய நிரோட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார் ஆளுநர்.
தமிழகத்தில் தேசிய நீரோட்டம் இல்லை  என்றும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com