ஐ. ஐ .டி. மரணங்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தாதே காரணம் - குற்றம் சாட்டும் நிரூபன்

ஐ. ஐ .டி.  மரணங்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தாதே காரணம்  -  குற்றம் சாட்டும் நிரூபன்

இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தவில்லை

ஐ ஐ டி கல்வி வளாகங்களில் நடைபெறும் மரணங்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தாததால் தான் என இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் நிரூபன் சக்கரவர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ஐஐடியில் தொடரும் மாணவர் தற்கொலைக்கு நீதி விசாரணை நடத்தக்கோரி, சென்னை ஐ ஐ டி அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சென்னை ஐஐடியில் பயின்று வந்த மகாராஷ்டிராவை மாணவர்
ஸ்ரீவன் சன்னி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் தொடரும் மாணவர்கள் தற்கொலைக்கு நீதி விசாரணை நடத்தக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கிண்டி ஐ.ஐ.டி நிறுவனத்திற்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தைச் சார்ந்த ஏராளமான மாணவர்கள் சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகளுக்கு தீர்வு காணும் வகையில் நீதி விசாரணை வேண்டுமென்றும்,  உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கிடை அமல்படுத்த வேண்டும் என்றும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். 

 இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி

இந்தியா முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் நிகழும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு தீர்வு காண நீதி விசாரணை வேண்டும் என்றும், 
சென்னை ஐஐடியில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து சென்னை ஐஐடி நிறுவனம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

135 க்கு மேற்பட்ட ஐ ஐ டி மரணங்கள்

மேலும் 2014 ல் இருந்து தற்போது வரை உயர் கல்வி நிறுவனங்களில் 135க்கும் மேற்பட்ட மரணங்கள் நடந்துள்ளதாகவும் ஐ ஐ டியில் நடைபெறும் மரணங்களுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தாமல் இருப்பது தான் என குற்றம் சாட்டினார்.
 ஐஐடியில் நிகழும்  மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் தற்கொலையை தடுக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், ஐஐடியில் இதற்க்கு முன்னர் பாத்திமா லத்தீப், மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோரின் தற்கொலைகளைகள் நடந்தேரிய நிலையில் தற்போது நடைபெற்ற தற்கொலை உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஐஐடியில் தொடரும் தற்கொலை மரணங்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com