”தமிழ்நாட்டிலிருந்து திமுகவை நீக்குவதற்காக இபிஎஸ் போராடி வருகிறார்" - ஆர்.பி. உதயகுமார்

தமிழ்நாட்டில் இருந்து திமுகவை நீக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி மன உறுதியுடன் போராடி வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய கழக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக தமிழ்நாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதற்காக மன உறுதியோடு, நெருப்பாற்றில் நீந்தி தீயாக வேள்வியை நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடியார். திமுக காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படாமல், தமிழ்நாட்டு மக்கள் தான் பெரிது, தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் பெரிது, தமிழ் இனம், தமிழ் மொழி என உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது கரத்தை வழுப்படுத்துவதற்கு யார் வந்தாலும் அவர்களை அரவணைத்துச் செல்லும் தாயுள்ளம் கொண்ட தலைவராக எடப்பாடியார் உள்ளார். 

தொடர்ந்து பேசியவர், கூட்டணி குறித்து காலம் வருகிற போது, நேரம் வருகிற போது குறிப்பாக தேர்தல் வருகிற போது எடப்பாடியார் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com