மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரே நேரத்தில் வருகை தந்த இபிஎஸ், கனிமொழி!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரே நேரத்தில் வருகை தந்த இபிஎஸ், கனிமொழி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் ஒரே நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தனர்.

உலக பிரசித்து பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம் செய்தார்.அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதேபோல் திமுக எம்.பி கனிமொழி தலைமையில், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு செய்தனர். பின்னர் கோயிலின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து
அறங்காவல் அதிகாரிகளுடன் கனிமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். 

முன்னதாக ஈபிஎஸ்ஸும் கனிமொழியும் ஒரே நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு  வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு  நிலவியது. பின்னர் இருவரும்  நலம் விசாரித்து  கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com