ஈரோடு தேர்தல்....ஓட்டுக்கு காசு...நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?!!!

ஈரோடு தேர்தல்....ஓட்டுக்கு காசு...நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?!!!

சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம் பேசியது, 

ஆதாரங்கள்:

மாநிலத் தேர்தல் ஆணையரை சந்தித்து பாஜக சார்பில் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் மாநில நிர்வாகிகள் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்களை விளக்கி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

சட்டப்படி தவறு:

அமைச்சர்கள் அனைவரும் ஒன்று கூடி எப்படி பணம் விநியோகம் செய்வது ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பது எனவும் மற்றொரு  அமைச்சர் ஐயாயிரம் கொடுத்தால் போதும் என்று கூறுவதாக கூறிய அவர், தேர்தல் பணிகளில் சரியாக ஈடுபடாத அதிகாரிகள அமைச்சர்கள் ஆடியோ, வீடியோ ஆதாரங்களை தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பித்திருக்கிறோம்.  இது போன்ற செயலில் ஈடுபடுவது சட்டபூர்வமாக தவறு உடனடியாக அவர்களை அமைச்சரவையை விட்டு நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார். 

தேர்தல் ஆணையத்திடம்..:

இது மட்டுமின்றி முறையாக தேர்தல் நடைபெறுவதற்கு அங்க பணியாற்றுகிற வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் தலைமை அதிகாரிகள் வரை ஈரோடு கிழக்கு பகுதியிலே புதிதாக நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும், இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் செல்வோம் என்றும் தெரிவித்துள்ளார். 

பணப்பட்டுவாடா:

தேர்தலை முறையாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முறையாக செய்ய வேண்டும், மத்திய, மாநில அரசின் பாதுகாப்பில் தேர்தல் நடக்க வேண்டும்
எனவும், அதிமுக பணப்பட்டுவாடா செய்ததாக புகார் வந்தால் அது குறித்தும் தெரிவிக்கப்படும் தற்பொழுது திமுக பணப்பட்டுவாடா செய்ததாக புகார் வந்தது அது குறித்து புகார் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com