பிரபல எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் காலமானார்..!

பிரபல எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் காலமானார்..!

முதுபெரும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 81.

தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் 1941-ஆம் ஆண்டு பிறந்த செயப்பிரகாசம், தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர். இந்தி எதிர்ப்பு, தமிழ் ஈழம் என பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். காடு, இரவுகள் உடையும், இரவு மழை  உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளையும், பள்ளிக்கூடம், மணல் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

கல்லூரி விரிவுரையாளராகவும், தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குனராகவும் பணியாற்றியவர். இந்நிலையில், விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com