உள்ளாட்சி தேர்தலில் ஆர்வமுடன் வாக்களிக்கும் முதல்முறை வாக்காளர்கள்!!

உள்ளாட்சி தேர்தலில் ஆர்வமுடன் வாக்களிக்கும் முதல்முறை வாக்காளர்கள்!!

பதினொரு ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல் முறை வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் கொரோனா கிருமி நாசினி வழங்கி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதில் வாக்குப்பதிவு துவங்கியது முதல் முதல்முறை வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றினர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com