கனிமொழி குறித்து அவதூறு பேச்சு; முன்னாள் எம்.எல்.ஏ கைது!

கனிமொழி குறித்து அவதூறு பேச்சு; முன்னாள் எம்.எல்.ஏ கைது!

விக்கிரவாண்டியில் கனிமொழி குறித்து அவதூறாக பேசிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் முன்னாள் எம்எல்ஏ வி ஏ டி கலிவரதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், நேற்று விலைவாசியை கட்டுப்படுத்தக்கோரி நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில், பேசிய தெற்கு மாவட்ட பாஜக தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.ஏ.டி கலிவரதன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசியிருந்தார்.

இந்நிலையில் கலிவரதனில் பேச்சுக் குறித்து திமுகவினர் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த விக்கிரவாண்டி போலீசார், வி.ஏ.டி கலியராதனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com