மகளிருக்கு ரூ.1,000 ரூபாய் வழங்கும் திட்டம்...முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை!

மகளிருக்கு ரூ.1,000 ரூபாய் வழங்கும் திட்டம்...முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை!

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. நடைபாதையில் வணிகம் செய்வோர், கட்டுமானத் தொழிலில் பணிபுரிவோர் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது. மேலும், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிருக்கு உதவிடும் வகையில் ஒரு கோடி பெண்கள் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தால் பயனடைவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. 

அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தகுதி வாய்ந்த மகளிரை தேர்வு செய்வது, வழிமுறைகளை நிர்ணிப்பது, அரசாணை வெளியிடுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com