29 வெளிநாடுகள் 15 பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்புடன் தொடங்கியது ஜி 20 மாநாடு...

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறுவதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
29 வெளிநாடுகள் 15 பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்புடன் தொடங்கியது ஜி 20 மாநாடு...

ஜி 20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ள நிலையில், உலக பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜி20 கூட்டங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், முதல் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் இன்று முதல் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வரை சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

இதில், 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூட்டம் நடைபெறும் பகுதிகள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் 3 நாட்களுக்கு டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரியில் நேற்று தொடங்கிய ஜி20 மாநாடு இன்று நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com