குறிப்பிட்ட சமூகத்திற்கு அதிமுக செல்வது என்றால் தான் இறந்துவிட்டதாக அர்த்தம்.... கே.பி முனுசாமி ஆவேசம்

குறிப்பிட்ட சமூகத்திற்கு அதிமுக செல்வது என்றால் தான் இறந்துவிட்டதாக அர்த்தம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சமூகத்திற்கு அதிமுக செல்வது என்றால் தான் இறந்துவிட்டதாக அர்த்தம்.... கே.பி முனுசாமி  ஆவேசம்

கிருஷ்ணகிரி நகரில் அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை அடுத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் பங்கேற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கழக நிர்வாகிகள் ஆலோசனை செய்வார்கள் என தெரிவித்திருப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த முனுசாமி, ஏற்கனவே தெளிவாக முடிவு எடுக்கப்பட்டு விட்டது கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சசிகலாவை சேர்க்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக கேள்விக்கு,  சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் இபிஎஸ் மூலம் நீக்கப்பட்டுள்ளனர் எந்த சூழ்நிலையிலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு கிடையாது என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com