தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்...!

தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்...!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று உலகம் முழுவதிலும் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.   இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.  அதன்படி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், உறுப்பினர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

அந்தந்த ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையை பின்பற்றி நடத்த வேண்டும் என்றும், மதச் சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com