சென்னையில் கடும் பனிமூட்டம்...! திருப்பி விடப்பட்ட விமானங்கள்...!

சென்னையில் கடும் பனிமூட்டம்...! திருப்பி விடப்பட்ட விமானங்கள்...!

பனி மூட்டம் காரணமாக விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத் பகுதிகளுக்கு திருப்பி விட்டப்பட்டன.

சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை 6:30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவியது.  இதையடுத்து சென்னை  விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6:30 மணிக்கு சென்னையில் தரையிறங்க மஸ்கட்டில் இருந்து 284 பயணிகளுடன் வந்த விமானம் கடும் பனிமூட்டம் காரணமாக  தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 

அதேபோல் காலை 6:55 மணிக்கு குவைத்திலிருந்து சென்னைக்கு 182 பயணிகளுடன் வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானிலே வட்டமடித்துக் கொண்டு இருந்தது. பின்னர் தரையிறங்க முடியாததால் ஐதரபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. புனேவில் இருந்து வந்த விமானமும் தரையிறங்க முடியாமல் ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டது.

 மேலும்  ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, மலேசியா, ஆகிய விமானங்கள் வானில் வட்டமடித்து பின்னர் தரையிறங்கியது. இதே போல் சென்னையில் இருந்து புறப்படும் ஐதராபாத்,  விசாகப்பட்டினம்,  ராஜமுந்திரி, மதுரை மும்பை உள்ளிட்ட 8 விமானங்கள் சுமார் அரை மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com