திமுக நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முன்னாள் அமைச்சர் கேள்வி...

திமுக நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முன்னாள் அமைச்சர் கேள்வி...

சென்னை பெரம்பூரில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதை நேரில் சென்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்ப்பார்வையிட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார பேசியவை:

நாடாளுமன்ற திறப்பு விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக சார்பில் கலந்துகொள்ள உள்ளனர். எதிர்கட்சி தலைவர் கலந்து கொள்வாரா என்பதை அவர்தான்  முடிவு செய்வார் என்றார். குடியரசு தலைவர் திறந்து வைக்காத நாடளுமன்ற திறப்பு விழாவிற்கு அதிமுக செல்கிறீர்களே என்ற கேள்விக்கு எங்கள் கட்சிக்கு அழைப்பு வந்துள்ளது நாங்கள் கலந்து கொள்கிறோம் என்ற அவர், இதை பற்றி அண்ணாமலையிடம் போயி கேளுங்கள் என்றார்.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசுகையில், அந்த  பயணம் போட்டோ ஷூட்டிற்காக (photo shoot) தான் சென்று இருக்கிறார். அது இன்ப சுற்றுலா என விமர்சித்தார். திமுக நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

துபாய் சென்று முதலீடு பெற்றுவந்தாக கூறும் முதல்வர் இதுவரை 700 நாட்கள் கடந்துவிட்டது. அப்படி கொண்டு வந்த முதலீட்டின் மூலம் எத்தனைபேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்?
என கேள்வி எழுப்பிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த முதலீட்டுள் என்ன என்பதை பட்டியலிட்டு வெள்ளையறிக்கையாக கொடுக்க தயார் என கூறினார்.

சட்ட ஒழுங்கு பிரச்சனையில், திமுக ஆட்சியில் எத்தனையே பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகிறது என அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்தார். தங்கம் தென்னரசு விவகாரத்தில், முதலமைச்சராக இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணத்தில் அவரது மகனும் சென்றார் என அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிராக அதிமுக சட்ட நடவடிக்கையில் ஈடுபடும்  என்றார்.

தமிழகத்தில் இருந்து செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைப்பது நமக்கு பெருமை என கூறினார். அதிமுக ஆட்சியில் தங்கமணி அமைச்சராக இருந்த போது மது பாட்டலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கவில்லை. அதை நான் உறுதியாக கூறுவேன் என திட்டவட்டமாக கூறிய அவர், தற்போது அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் நிச்சயம் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என உறுதியாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com