ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்ட திமுக கவுன்சிலரின் கணவர்.....!

ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்ட  திமுக கவுன்சிலரின் கணவர்.....!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையல்க்கூடம் மராமத்து பணிக்கு ஒப்பந்ததாரரிடம் பத்தாயிரம்  கமிஷன் கேட்கும் திமுக மாவட்ட கவுன்சிலரின் கணவரின் ஆடியோ வைரல் ஆகி வருகிறது.

முதுகுளத்தூர் அருகே உள்ள ஆத்திகுளம் ஊராட்சிக்கு உட்பட்டது கடமங்குளம் கிராமம் .இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்குள்ள பள்ளியின் அருகே சமையல் கூடம் உள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ராஜா என்பவர் ஒப்பந்தம் எடுத்து வேலை பார்க்க 59,000 ஆயிரம்  நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் ராமநாதபுர திமுக மாவட்ட கவுன்சிலர் கோவிந்தம்மாள் என்பவரின் கணவர் அருண் பிரசாத் என்பவர் ஒப்பந்ததாரரிடம் தான் மாவட்ட கவுன்சிலர் பேசுவதாகவும் நீங்கள் எடுத்த அந்த வேலை 59 ஆயிரம் எனவும் அதற்காக தங்கள் பத்தாயிரம் எனக்கு தர வேண்டும் என கறராக கூறியுள்ளார். அதற்கு ஒப்பந்தம் எடுத்த நபர் ஏற்கனவே வக்கீலிடம் 5000 கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு அது வேற டீலிங் நான் பேச முடியாது நான் உடைகுளம், காக்கூர் – கதையன், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை எடுத்துப் பார்க்கிறேன் அந்த வேலையெல்லாம் 50,000 எனவும் ,ஆனால் நீங்கள் பார்க்கும் வேலை மட்டும் தான் அதிகமாக தொகை உள்ளது. ஆகையால் எனக்கு கண்டிப்பாக பத்தாயிரம் வேண்டும் அப்படி நீங்கள் தரவில்லை என்றால் நீங்கள் எடுத்த டெண்டரை ரத்து செய்து விடுவேன் எனவும், பில் எழுதவிட மாட்டேன்  என மிரட்டும் தோனியில் கமிஷன் கேட்கும் இந்த ஆடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

 சமூகநீதி பேசும் விடியா திமுக ஆட்சியில் திமுக ஒப்பந்ததாரரிடம் திமுக மாவட்ட கவுன்சிலரின் கணவர்  கமிஷன் கேட்கும் ஆடியோ தற்பொழுது வைரலாகி பொதுமக்களிடத்திலல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com