12 வது அமைச்சரவை கூட்டம்...திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அறிவுறுத்தல்...!

12 வது அமைச்சரவை கூட்டம்...திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அறிவுறுத்தல்...!

பெட்ரோனஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று வரும் 7-ந் தேதி உடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் 12-வது கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணி அளவில் தொடங்கியது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அப்போது, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியான அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார். மேலும், பெட்ரோனஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட  5 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைவதற்கு முன்பாகவே நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com