” நீதிமன்ற தீர்ப்புகளின் படியே அமைச்சர்கள் மீது விசாரணை ”- வானதி சீனிவாசன்.

” நீதிமன்ற தீர்ப்புகளின் படியே அமைச்சர்கள் மீது விசாரணை ”- வானதி சீனிவாசன்.

தமிழ்நாடு  அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் மீது நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சுந்தராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் நடத்தப்படும் சிறுதானிய பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. நிகழ்வை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நிகழ்ச்சி தொடங்கி வைத்த பின்  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில்:-

சிறுதானிய உணவு பொருட்களை வைத்து மகளிரணிக்கு  போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக சிறுதாணிய  பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டு வருவதாக கூறினார். மேலும் மேகதாதுவில் அணைகட்டும் காங்கிரஸ் அரசை பற்றி கருத்து தெரிவிக்காமல் மோடி எதிரான விடயங்களுக்கு முதல்வர் செல்கின்றார் எனவும், சுயலாப அரசியலை மட்டும் முதல்வர்  எடுத்து செல்கின்றார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

காவிரி உயிர்நாடி பிரச்சினை என்று குறிப்பிட்ட வானதி சீனிவாசன், மோடி பதவி ஏற்ற பின்னர் நடுநிலையான போக்கில் செயல்படுவதால் குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறக்கப்படுவதாக கூறினார். 
கர்நாடகத்தில் நடுவர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று பா.ஜ.க அரசு சொல்லியதாகவும்,
இப்போதயை காங்கிரஸ் துணை முதல்வர்,  ”மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்” என சொல்கின்றார் எனவும் அவர் சாடினார். 

மறைந்தவர்களை பற்றி பேச கூடாது இருப்பினும் மறைந்த  கலைஞர் காலத்தில் கூட தமிழகத்தின் உரிமைகளை விட்டு கொடுத்தீர்கள் என்று குற்றம்சாட்டினார்.

இத்தனை வருட காலம் இருந்த காவிரி பிரச்சினைக்கு தீர்வை கொடுத்தவர் மோடி என்று கூறிய வானதி சீனிவாசன், மக்களின் நலனை விட, காவிரி பிரச்சினையை விட , தமிழகத்தின் விவசாயிகளை தாண்டி மோடி எதிர்ப்பு அரசியல்தான் முக்கியமாக இருக்கின்றதா? என் கேள்வி எழுப்பினார்.

பொன்முடி , செந்தில் பாலாஜி  போன்ற அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு எந்த காலத்தில் நடத்தது என்பதை பார்க்க வேண்டும் என்றும், இந்த இரு அமைச்சர்கள் மீது நீதிமன்ற தீர்ப்புகளில் அடிப்படையில் விசாரணை நடைபெறுகின்றது என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் இனிமேல் திராவிட மாடல் ஆட்சியில் காலையில் குடிப்பவர்கள் குடிகாரர்இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com