இன்று மற்றும் நாளை தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு...

இன்று மற்றும் நாளை தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு...
Published on: 
Updated on: 
1 min read

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல போல வரும் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரம் வரையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் விதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com