இட்லிக்கும் சட்னிக்கும் வரி என்று தான் மோடி அரசு....!!

இட்லிக்கும் சட்னிக்கும் வரி என்று தான் மோடி அரசு....!!

பெண்கள் தான் இந்த சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டு ஒடுக்கபடுவதால் பெண்கள் அரசியலுக்கு தேவை.மாறுபட்ட காலம் மாறினாலும் பெண்களை அடிமைப்படுத்தும் குணம் இன்னும் மாறவில்லை.

தலைமையில்:

சென்னையில் உள்ள கே.கே நகரில் பெண்களின் உரிமைகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மகளிர் தினம் பொதுக்கூட்டம் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெற்றது. ஆண்களை விட பெண்கள் தான் வலிமையான வேலைகளையும்,மனரீதியான வலிமையும் உண்டு.  

கீழ்த்தரமானவர்கள்:

உலகளவில் பெண்கள் அமைப்பாக திரண்டால் சுரண்டலை ஒழிக்க முடியும் எனவும் ஆண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி பெண்களை விட குறைவு எனக் கூறிய அவர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்லும் ஆண்கள் போல் கீழ்தரமானவர்கள் யாரும் இல்லை எனத் தெரிவித்தார்.

ஒன்றிணைந்து:

ஆண்களை நம்பாதீங்க எனவும் அனைத்து தெருக்களிலும் பெண்கள் அமைப்பாக திரண்டு குடிப்பவர்களை உதைக்க வேண்டும் எனவும் கூறிய அவர் பெண்கள் மீதான வன்முறை வழக்காக மாற்றபட்டதா?  எனவும் பெண்கள் அமைப்பாக ஒன்றிணைந்து அரசியலுக்கு வர வேண்டும் எனவும் பேசினார்.

இட்லிக்கும் சட்னிக்கும்:

தற்போது கூட நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடக்கிறது எனவும் பாஜக இந்தியா முழுவதும் வெற்றி பெற்றால் பெண்கள் படிக்க கூடாது என்று சட்டம் இயற்றுவார்கள் எனவும் கூறினார்.  மேலும் இட்லிக்கும் சட்னிக்கும் வரி என்று தான் மோடி அரசு ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது எனவும் பெண்களுக்கு தேவைப்படுகின்ற மின்இயந்திரங்கள் அனைத்தும் அரசு தர வேண்டும்எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com