கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் கீழ் புதிய சீரமைப்பு பணிகள்...அப்படி என்ன சீரமைப்பு?!!

கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் கீழ் புதிய சீரமைப்பு பணிகள்...அப்படி என்ன சீரமைப்பு?!!
Published on
Updated on
1 min read

அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பயணிகளின் பொதுப் பேருந்து சேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும் மற்றும் 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திடவும்  அறிவிப்பை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரன் வெளியிட்டுள்ளார்.

குறைந்த மக்கள் எண்ணிக்கை:

பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை 2020-2021 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 70 இலட்சமாக குறைந்தது. இதனால் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் பேருந்து சேவைகள் சீராக்கப்பட்ட பின்பு இது நாளொன்றுக்கு 1 கோடியே 70 இலட்சம் பயணிகளாக இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.

மகளிரின் பங்களிப்பு:

மேலும் ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மகளிரின் பங்களிப்பு இன்றியமையாததாக இருப்பதால், தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்பட்டு வருகிறது. 

கட்டணமில்லா பேருந்து:

அரசின் மிகச்சிறந்த திட்டமான இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும் மற்றும் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ரூ.130 கோடி செலவில்:

நல்ல நிலையிலுள்ள 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திட அரசின் நிதியாக ரூ.80 கோடியும் எஞ்சிய ரூ.50 கோடியினை அந்தந்த போக்குவரத்துக் கழகங்களே ஏற்கவும் அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. மேலும், ரூ.420 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கும் அரசாணை வெளியிடப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com