ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேச்சுக்கு - ஓஎஸ்.மணியன் தக்க பதிலடி ...!

ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேச்சுக்கு - ஓஎஸ்.மணியன்  தக்க பதிலடி ...!

எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என விமர்சித்த வைத்திலிங்கத்தின் பேச்சு, பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போல இருப்பதாக, நாகையில் செய்தியாளர்களை சந்தித்த  அதிமுக அமைப்பு செயலாளர்  ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார். 

கட்சியின் அமைப்பு செயலாளரான ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்கள் சந்திப்பு:

அதிமுக வின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரான  ஓஎஸ் மணியனை கட்சியின் அமைப்பு செயலாளராக அறிவித்துள்ளார்.  அமைப்பு செயலாளராக ஓஎஸ்.மணியன் அறிவிக்கப்பட்டதையடுத்து, நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார். அங்கு ஏராளமான தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்ததை தொடர்ந்து, அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து  அதிமுக அமைப்பு செயலாளர் ஓஎஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த ஓஎஸ்.மணியன்:

அப்போது, எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லாது என விமர்சித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய  கேள்விக்கு பதிலளித்த ஓஎஸ்.மணியன், பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போல உள்ளது வைத்திலிங்கத்தின் விமர்சனம் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

ஒபிஎஸ் 22 பேரை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து விமர்சித்த ஓஎஸ்.மணியன்:

ஒபிஎஸ் 22 பேரை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓஎஸ்.மணியன், அதிமுகவின் சட்ட விதிகளின்படி  வளர்ச்சி பாதைக்கு  கொண்டு செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதன்படி எடப்பாடி கூட்டிய பொதுக்குழு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எந்த சூழ்நிலையிலும் தடம் மாறாதவர்கள். 1973 முதல் அதிமுக என்றுமே வளர்ச்சிப்பாதையில் தான்  செல்கிறது என்று கூறினார். 

நாகை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் புகைப்படம் அகற்றம்:

இதனிடையே நாகை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், ஓஎஸ்.மணியன் ஆகியோர் புகைப்படங்களில் ஒ.பன்னீர்செல்வம் புகைப்படம் அகற்றப்பட்டு இருந்தது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com