தொடர் மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்... 3 பேர் அடங்கிய குழு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு...

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று 3 பேர் கொண்ட மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில்  உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர் மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்... 3 பேர் அடங்கிய குழு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு...

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடியில் அதிகளவு மகசூல் கிடைத்தாலும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் கடும் சிரமத்திற்கு விவசாயிகள் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டாலும், மத்திய அரசு 17 சதவீதத்திற்கு மேல் உள்ள நெல் மணிகளை கொள்முதல் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் சாலையோரம் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி இரவு பகலாக பாதுகாத்து வருகின்றன. 

இதனிடையே தற்போது கனமழையும் பெய்து வருவதால் நெல்கள் அனைத்தும் நனைந்து முளைத்து வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி நெல் ஈரப்பதத்தை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்ச மு.க.ஸ்டாலின் விவசாயிகளை கோரிக்கைகளை உடனடியாக ஏற்று நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து ஐதாரபாத்தில் உள்ள இந்திய உணவு கழகத்தின் தரக்கட்டுப்பாட்டு தென்மண்டல இயக்குநர் எம்.எஸ். காண் தலைமையில் மூன்று  பேர் கொண்ட குழுவினர் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட  பகுதியில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது மத்திய குழுவினரிடம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com