சிவகங்கையில் திடிரென பொழிந்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. அப்போது தரையில் விழுந்து ஐஸ் கட்டியை சேகரித்த பொதுமக்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக எடுத்து வைத்துக் கொண்டனர்.