திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி....!!

திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி....!!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெய்த இதமான மழையால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். 

தமிழ்நாட்டில் கோடை வெயில் துவங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  இந்நிலையில், விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்  சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.  இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனா். 

இதே போன்று திருப்பூர் மாவட்டத்தில் வெயில் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்து வந்தனர்.  இந்நிலையில், திருப்பூர் மாநகர்  பகுதிகளை சுற்றியுள்ள அனுப்பர்பாளையம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.  இதனால் சாலைகளில் தண்ணீர் நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்தது.  இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த மழையால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பருவநிலை மாற்றம் காரணமாக திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இருமன் குளம் வடக்கு புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.  இந்த திடீர் மழையால் கோடை வெப்பம் தணிந்த  விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com