இலங்கை மீனவர்களிடம் போலீசார் விசாரணை.!

நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு வந்த இலங்கை குடிமக்களை  கடலோரக் காவல் குழும போலீசார் விசாரித்து வருகின்றனர். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரையில் இருந்து 13 கடல்மைல் தொலைவில் நான்கு நாட்களாக படகு பழுதானதல் கடலில்தத்தளித்த  இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த நிக்சன்டிலக்ஸ், சுபத்ரன் ஆகிய இரண்டு நபர்கள் கோடியக்கரை அருகே சிறுதலை காடு கடற்கரையில் இன்று காலை படகுடன் கரைசேர்ந்தனர்.

பின்பு அங்கிருந்து 5 கி.மீ தூரம் கடற்கரை ஓரம் நடந்து கோடியக்கரை கடற்கரைக்கு வந்து சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்து விரைந்த வேதாரண்யம் கடலோர காவல் குழு போலீசார்  இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து  இவர்கள் 2 பேரும் மீனவர்களா? அல்லது கடத்தல் காரர்களா? படகு பழுதாகி உள்ளதா? என பல்வேறு கோணங்களில்  போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இரண்டு இலங்கை நபர்கள்  மீதும் எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com