அரசியல் கட்சித் தலைவர்களின் மிலாது நபி திருநாள் வாழ்த்து!!

மிலாது நபி திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமைதியை உலகெங்கும் பரப்பிய முகமது நபி பிறந்த இத்திருநாளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம் என தெரிவித்துள்ளார். 

மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு மிலாதுன் நபி நன்னாள் வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறியிருக்கிறார்.

இதே போல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  அண்ணல் நபிகள் நாயகம் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும், அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அகிலம் போற்றும் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த திருநாளாகிய இப்பெருநாளில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தனது உளம் கனிந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com