ராகுலைப் பற்றி பேசிய குஷ்பூவுக்கு கண்டனம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா செய்தியாளர்களை சந்தித்தார்
ராகுலைப் பற்றி பேசிய குஷ்பூவுக்கு கண்டனம்

தேர்தலில் வாய்ப்பு கிடைக்குமா என்று குஷ்பு, ஒவ்வொரு கட்சியாக தாவிக் கொண்டு இருக்கிறார் என்று, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா விமர்சித்துள்ளார். சென்னை சத்திய மூர்த்தி பவனில் மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்துக்களை ராகுல் காந்தி அவமதித்து விட்டார் என்று குஷ்பூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். இந்து கடவுளை குஷ்பூ எவ்வளவு அவமானப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும் என கூறிய அவர், குஷ்பூவுக்கென்று எந்த சித்தாந்தமும் கிடையாது என்றும், சேலையை மாற்றுவது போல் சித்தாந்தத்தை மாற்றுபவர்தான் குஷ்பூ என்றும் கடுமையாக சாடினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com